சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹட்டன் புனித கப்ரியல் கல்லூரியின் பழைய மாணவர் யுனைடட் பெண்கள் கழகம் நாட்டுக்கே எடுத்துக்காட்டும் வகையில் கொண்டாட்டங்களை கைவிட்டு
அக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவு வகையில் அவர்களின் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு இன்று 8 ம் திகதி காலை முதல் மாலை வரை அக்கல்லூரியின் வளாகத்தையும் கல்லுயினையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது.
புனித கப்ரியல் கல்லூரியின் அதிபர் டப்ளியு .வீரதுங்க அவர்களின் வழிகாட்டலில் தமிழ் பிரிவு பொறுப்பாளர் ஆர் .மனோன்மணி அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பழைய மாணவிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்