மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய அதிபர் கிம் திட்டம் – தென் கொரியா தகவல்!

0
21
dailythanthi

தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் மகள் கிம் ஜூ ஏ (வயது 13), அவரது அரசியல் வாரி சாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இது வெறும் அனுமானம் அல்ல என் றும், இதற்கான நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் கிம் ஜூ ஏ, ராணுவப் பயிற்சியின் போது ராணுவடாங்கிகளை ஓட்டியதும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அரசு ஊடகங்கள் அவரை ‘மதிப்பிற்குரிய மகள்’ என்றும், நாட்டின் உயரிய தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘வழிகாட்டும் மாபெரும் நபர்’ என்ற பட்டத்தையும் வழங்கி கவுரவம் அளித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தந்தைவழி சமூக அமைப்பில் ஒரு பெண்ணை வாரிசாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இவ்வளவு முன்னதாகவே அவர் மக்களிடையே அறிமுகப்படுத்தப்படுவதாக தென்கொரியா கருதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here