மகாவலி கங்கைக்கு அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து வெளியேறும் நீரானது மகாவலி கங்கையுடன் இணைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால் மகாவலி கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. மேலும், கலாஓயா, மட்டக்களப்பு – முந்தனையாறு ஆகியவற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.