மகிந்தவை பழிவாங்கும் அநுர – திலும் அமுனுகம சாடல்!

0
4

உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச ஆகியோர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்குரிய எவ்வித சலுகைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குக்குள்ளாக்க இந்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது.

பிரிவினைவாத கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் வீதிக்கு வருவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விஜேராம அரச இல்லத்தில் இருந்து வெளியேற்றினால் அவருக்கு பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரத்துடன் தமது வீடுகளை கையளிக்க தயாராகவுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆடைக் கைத்தொழில்துறையை அறிமுகப்படுத்தியதால் தான் இன்றும் பல்லாயிரக் கணக்கான நடுத்தர குடும்பங்கள் வாழ்கின்றன.

ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல அது தேசியத்தின் கடமை. பழிவாங்கும் நோக்கில் சிறுப்பிள்ளைத்தனமாக செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here