மக்களின் உயிர்களை காக்க அரச சேவைக்கு அப்பால் தபால் திணைக்கள ஊழியர்கள் இரத்ததானம்.

0
199

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் இரத்தானம் செய்யும் நிகழ்வுகள் குறைந்துள்ளன .இதனால் வைத்தியசாலைகளில் காணப்படும் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளன இந்நிலையில் சாதாரணமாக நடைபெறுக்கின்ற சத்திர சிகிச்சைகள் நாள் தோறு நடைபெற்று வருவதனை கருத்தில் கொண்டு ஹட்டன் தபாலக நலன்புரி சங்கம் ஒழுங்கு செய்யத இரத்தானம் ஒன்று இன்று (27) ஹட்டன் தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வதேச தபால் தினத்திற்கு இணையாக இரண்டாவது தடைவையாக நடைபெற்ற குறித்த இரத்தான நிகழ்வு அரச சேவைக்கு அப்பால் மக்களின் உயிர்களை காக்க தங்களால் இயன்ற பணியினை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக குறித்த இரத்தான நிகழ்வினை வருடம் தோறு நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய நிகழ்வின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

இந்த இரத்தான நிகழ்வில் தபால் ஊழியர்கள் ஊடக வியலாளர்கள்,பொலிஸார், மற்றும் பொது சுமார் 50 மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here