எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முக்கிய மூன்று வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் பருப்பு ஒரு கிலோகிராம் 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.