மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தனது கடமையை முழுமையாக தவறியது.!

0
117

நாட்டின் நிலைமை சீர்குழைந்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் மக்களுக்குமிடையிலே வன்முறை தூண்டப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் தன் கடமையை செய்ய தவறிவிட்டனர் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொது மக்களையும்,சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவரையும் பாதுகாக்க முடியாத பொலிஸ் அதிகாரிகள் வேறு யாரை பாதுகாக்க போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வன்முறையாக மாறியுள்ளது. சம்பத்திற்கு பொலிஸ் மா அதிபர் முழுப்பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டின் சட்ட ஒழுங்கையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க தவறியுள்ளனர். எனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here