மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி – தூக்கத்தில் பறிபோனது 11 குழந்தைகளின் உயிர்!

0
13

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: 42 இந்திய யாத்திரிகள் பலி!

சவூதி அரேபியாவில் பஸ் -டீசல் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ் -டீசல் லொறி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பஸ் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம். பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது.

lokmattimes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here