மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இருவேறு விபத்துகளில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வாகரை, கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.
குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிக்கு சென்ற வாகரை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குளத்தில் இருந்த குழியில் மூழ்கி 10 -12 . வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர். மூவரில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்கமுனைந்தபோது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியே இந்த விபத்து இடம்பெற்றள்ளது.
கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.