மண்சரிவினால் மூடப்பட்ட தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதி வழமைக்கு திரும்பின!!

0
238

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை மெதகும்புர பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக 24.11.2018 அன்று காலை அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்டபின் வழமைக்கு திரும்பின.குறித்த வீதியில் ஏற்பட்ட மண்சரிவினை வீதி அதிகார சபையினரும், பூண்டுலோயா பொலிஸாரும் இணைந்து அவ்வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர். அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

DSC00714 DSC00712 DSC00691

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here