மண்ணெண்ணெய்க்காக ஆயிரக்கணக்கானோர் எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தை சூழ, நீண்ட வரிசையில் – பதற்றமான சூழ்நிலை

0
189

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அட்டன், மல்லியப்பு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தை சூழ, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.சிறார்கள், யுவதிகள், தாய்மார் மற்றும் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று (09.05.2022) காலை 6 மணி முதல் வரிசையில் நிற்கின்றனர். சில தாய்மார் கைக்குழந்தைகளுடன் வரிசையில் நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.

வரிசையில் நின்ற முதியவர்களில் சிலர் தமக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாகவும், எனவே, முதியவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மாரும் இதே கோரிக்கையை விடுத்தனர்.

சிறார்கள் பாடசாலைகளுக்கு செல்லாமலும், தோட்ட மக்கள் தொழிலுக்கு செல்லாமலுமே மண்ணெண்ணைய் வாங்குவதற்காக காலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here