மண்ணெண்ணெய் கோரி மக்கள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் போக்குவரத்து பாதிப்பு.

0
165

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சொந்தமான எண்ணை நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பொதுப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் குறித்த எரிபோருள் நிரப்பு நிலையத்திற் நிரப்பு நிலையத்திற்கு நேற்று (18) மண்ணெண்ணெய் பெற்று கொடுக்கப்பட்டன.
நபர் ஒருவருக்கு இரண்டு லீற்றர் மண்ணெண்ணையே பெற்றுக்கொடுக்கபப்ட்டன.
மண்ணெண்ணெய் பெறுவதற்காக இன்று சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நீண்ட வரிசையில் உண்ண உணவின்றி மண்ணெண்ணைக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிலருக்கு மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் வரிசையில் நின்ற மற்றும் சிலருக்கு முடிந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் எண்ணை நிரப்பும் நிலையத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதனால் ஹட்டன் பொழும்பு ஹட்டன் நுவரெலியா|,ஹட்டன் கண்டி உள்ளிட்ட பிரதான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.

ஆர்பாட்டகாரர்கள் ‘வேண்டும் வேண்டும் மண்ணெண்ணை வேண்டும’;,’கோட்டா கோ ஹோம்’ என்று கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே வேளை ஒரு சில பாவனையாளர்கள் இடையே கைகலப்பும் ஏற்பட்ட அதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு நிலைமையினை சமாளித்தனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இன்று அதிகாலை இருந்து சாப்பிடாமல் கூட இரண்டு லீற்றர் எண்ணை பெற்றுக்கொள்ள வரிசையில் நிறகிறோம். ஒரு சிலர் குடும்பத்தில் ஐந்து ஆறு பேர் வந்து எண்ணை பெற்று செல்கின்றனர்,டோக்கன் கொடுத்து வழங்குகிறோம் அநீதி நிகழாது என்றெல்லாம் தெரிவித்தார்கள் ஆனால் எந்த வித பயனுமில்லை.நாங்கள் இந்த ரெண்டு லீற்றர் எண்ணையினை கொண்டு தான் சமைக்க வேண்டும்.

எங்களது பிள்ளைகள் பட்டினியில் வாடுகின்றனர்.எனது கணவரும் இன்று வேலைக்கு செல்லாது எண்ணை வரிசையில் நின்று கூட ரெண்டு லீற்றர் எண்ணை பெறமுடியவில்லை.ஆகவே இதற்கு ஒரு நியாயம் வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று காலையிலிருந்து பல மணித்தியாலங்கள் பெண்கள் தங்களது கை குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் எண்ணை நிரப்பு நிலையம் நெருக்கும் போது எண்ணை இல்லை என்று தெரிவிக்கிறார்கள் ஒன்று இதற்கு முறையான ஒரு வேலைத்திட்டம் இருக்க வேண்டும் வரிசையில் உள்ளவர்களை எண்ணை இவ்வாளவு பேருக்கு தான் கொடுக்க முடியும் என்றால் பலர் நேரத்தோடவே வீட்டுக்கு சென்றிருப்பார்கள் ஆனால் அவ்வாறு செய்யாது பல மணித்தியாலங்கள் காக்க வைத்துவிட்டு எண்ணை இல்லை என்றால் பொது மக்கள் என்ன செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் முறையான திட்டம் ஒன்றின் கீழ் அனைவருக்கும் எண்ணை கிடைக்கும்வகையில் எண்ணை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் உரிய பொறிமுறை ஒன்றினை அமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாகும்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here