மண்திட்டுடன் கட்டடம் இடிந்து வீழ்ந்து அட்டன் பகுதியில் வீடு ஒன்று சேதம்!!

0
146

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் வில்பிரட்புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது 02.04.2018 அன்று இரவு 11.00 மணியளவில் மண்திட்டுடன் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததுள்ளனால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கட்டடம் இடிந்து விழும் போது வீட்டில் நான்கு பேர் உறங்கி கொண்டிருந்துள்ளதுடன் தெய்வாதீனமாக எவருக்கும் சிறிய காயங்கள் கூட ஏற்படவில்லை.

மண்திட்டு சரிந்ததன் காரணமாக வீட்டின் இரண்டு அறைகளுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.

DSC01993 DSC01995 DSC01997

இந்த சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸாருக்கும், கிராம சேவகருக்கும் அறிவிக்கபட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்திற்கு மாலை வேளையில் மழை பெய்து வருவதனாலேயே இந்த மண்திட்டு சரிந்து வீழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here