எதிர்வரும் வெசாக் தினத்தையொட்டி நடைபெறவுள்ள தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக, மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மிருகவதையை நிறுத்துவதன் பொருட்டு இறைச்சிக் கடைகளை மூடுமாறும் மதுபானக் கடைகள் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்களை மூடுமாறும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தை மையமாக வைத்து வெசாக் வாரமாக பெயரிடப்பட்டு எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையின் தொனிப்பொருள் “மற்றவர்கள் செய்ததை பார்க்காமல் நாம் செய்ததை நோக்குவோம்” என்பதாகும்.
விழாவின் தொடக்க விழா மாத்தளை தர்மராஜா பிரிவெனா வளாகத்திலும், நிறைவு விழா பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மில்லவன ஸ்ரீ சுனந்தராம ஆலய வளாகத்திலும் நடைபெற உள்ளது.