மத்திய மாகாண கல்விச் சேவையாளர்களின் சணச சங்கத்தின் மகா சபை அங்கத்தவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 17 திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தற்போதைய தலைவர் கப்பில பியந்த தெரிவித்தார்.
குறித்த மகாசபை அங்கத்தவர் தெரிவு எதிர்வரும் 25 ம் திகதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குறித்த சபைக்கு வேட்புமனு கையளித்துள்ள அபேட்சகர்கள் அதிகமானவர்கள் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ளதாக வேட்புமுனு தாக்கல் செய்தவர்கள் வாக்கெடுப்பின் பிற்போடுமாறு கோரிக்கை விடுத்ததற்கமைவாகவும் மத்திய மாகாண கூட்டுறவு சங்க ஆணையாளர் இது தொடர்பாக பணிபாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிமைக்கமைவாகவும் நேற்று (21) திகதி கண்டி சணச சங்கத்தில் கூடிய விசேட பணிப்பாளர் சபையில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண சணச சங்கத்தின் மகா சபை அங்கத்தவர் தெரிவு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் குறித்த காலப்பகுதி கடந்த மார்ச் மாதத்துடன் நிறை பெற்றுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக உரிய நேரத்தில் குறித்த சபைக்கான தெரிவுகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் மத்திய மாகாணத்தில் உள்ள 15 கல்வி வலயங்களிலும் மற்றும் ஓய்வூதிய காரர்களிடமிருந்தும் எதிர்வரம் 25 திகதி தேர்தல் நடத்துவதற்கு வேட்புமனு கோரப்பட்டன.
இதில் நாவுல, நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, தெனுவர, கலேவெல உள்ளிட்ட வலயங்களில் குறித்த மகாசபைக்கு தேவையான அங்கத்தவர்கள் வாக்கெடுப்பின்றி நேரடியாக தெரிவு செய்யப்பட்டன.ஏனைய 09 கல்வி வலயங்களுக்கே தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு காரணமாக குறித்த தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விச் சேவையாளர்களின் சணச மகாசங்கத்திற்கு 15 கல்வி வலயங்களிலிருநம் அங்கத்தவர்களின் விகிதாசாரத்திற்கேற்ப சுமார் 107 பேர் தெரிவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவஞ்ஞன்