ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்
தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டமைக்கே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.
ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.




