மயக்க மருந்து ஸ்ப்ரே இன்மையால் மேல் செரிமான அமைப்பைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி (UGIE) சோதனைகள் பல வைத்தியசாலைகளில் தாமதமாகி வருகின்றன.
இந்த மயக்க மருந்து இலங்கையில் கிடைப்பதில்லை. தற்போது சந்தையில் உள்ள தயாரிப்புக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி அளிக்கவில்லை.
இதன் காரணமாக நிபுணர்கள் வழக்கமான மற்றும் அவசரகால நடைமுறைகளை ஒத்திவைத்துள்ளனர்.
சில வைத்தியர்கள் தனிப்பட்ட நோயாளிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மயக்க மருந்து ஸ்ப்ரேயை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் பெரும்பாலான வைத்தியசாலை நடைமுறைகள் புதிய திகதிகள் இன்மையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
தேசிய, கற்பித்தல் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் UGIE சோதனைகள் வழக்கமாக செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுகிறார்கள்.