நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன் டிலரி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த பாரஊர்த்தி ஒன்று 50அடி பள்ளத்தில் தடம் புரண்டதில் பாரஊர்த்தியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்ட் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த விபத்து 29.08.2018.புதன்கிழமை மாலை வேலையில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. பொகவந்தலாவ லோய்னோன் தோட்டபகுதியில் வெட்டபடுகின்ற மரக்குற்றிகளை ஏற்றிகொண்டு மொரட்டுவ பகுதியை நோக்கி பயணித்த பாரஊர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் பாரஊர்த்தியின் இயந்திர கோளாரு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவத்தில் பாரஊர்திக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)



