மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை 100 வீதத்தால் அதிகரிப்பு

0
179

காய்கறிகள் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள போட்டியால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.தம்புள்ளை சந்தையில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்று (23) முதல் கிட்டத்தட்ட 100 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மொத்த விநியோகம் சுமார் 08 இலட்சம் கிலோவாக காணப்பட்டுள்ளது.

மரக்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதோடு விவசாயிகள் பயிர்ச்செய்கையில் இருந்து விலகியமையால் மொத்த சந்தை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலைய தொழிற்சங்கத்தின் செயலாளர் ஐ. ஜி. விஜயானந்தா நேற்று (23) சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்தார்.

தம்புள்ளை மொத்த சந்தைக்கு மலையகம், தாழ்நிலம், ஊவா, வடமேற்கு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து நாளாந்தம் 20 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் பெறப்படுவதாகவும் இந்த நாட்களில் பத்து இலட்சம் கிலோவிற்கும் குறைவான மரக்கறிகளே கிடைக்கப்பெறுவதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறிகள் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள போட்டியால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வாரம் 200 ரூபாய்க்கு குறைவாக இருந்த பல காய்கறிகளின் மொத்த விலை நேற்று (23) 300 ரூபாயை தாண்டியது.

ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த விற்பனை விலை 500 முதல் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை போஞ்சி மற்றும் கரட்டின் மொத்த விலை 350 ரூபா முதல் 400 ரூபாய் வரையிலும், லீக்ஸ் கிலோ ஒன்றின் விலை 180 ரூபா முதல் 220 ரூபா வரையிலும், தக்காளி கிலோ ஒன்றின் மொத்த விலை 140 ரூபா முதல் 1650 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, நோகோல் கிலோ 240 ரூபா முதல் 270 ரூபா வரையிலும் கிலோ , முள்ளங்கி ஒரு கிலோ100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும் , கத்தரிக்காய் ஒரு கிலோ 170 ரூபாய் முதல் 210 ரூபாய்க்கும் , பயற்றங்காய் ஒரு கிலோ 250 ரூபா முதல் 280 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 600 ரூபா முதல் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here