குருணாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆம் திகதி காலை, இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் குறித்த சிறுவன் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார்.
சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.