மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு குடியிருப்புகள் முழுமையாக சேதம் ஒருவருக்கு காயம்- தலவாகலையில் சம்பவம்!!

0
141

தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடகும்புற தோட்டவைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இரண்டு குடியிருப்பின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததினால் இரண்டு குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்து மடக்கும்பற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 10.06.2018.ஞாயிற்றுகிழமை விடியற்காலை 05மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நேற்று இரவு பெய்த மழையுடன் கூடிய கடும் காற்றின் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த 11பேர் பாதிப்புகுள்ளாகி தற்காலிமாக தங்கவைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Picture-2018-06-10 09.29.31 Picture-2018-06-10 09.29.19 Picture-2018-06-10 09.30.59

DSC08151

எஸ்.சதீஸ், டி.சந்ரு, க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here