மர நடுகை வேலைத்திட்டம்….

0
229

ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதி அன்று உலக ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, அட்டன், கொட்டகலை கெம்பிரிட்ஜ் கல்லூரியில் அட்டன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மர நடுகை வேலைத்திட்டம் இன்று (19.09.2021) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது அட்டன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

மேலும், கொழும்பு, யாழ்ப்பாணம், அட்டன், குருணாகலை ஆகிய இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இச்செயற்றிட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளன.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here