மலசலகூட கழிவினால் பொகவந்தலாவ பகுதியில் துர்நாற்றம் – பொதுமக்கள் விசனம்!!!

0
150

மலசலகூட கழிவினால் பொகவந்தலாவ பகுதியில் துருநாற்றம்பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மலசல கூட கழிவுநீர் பேருந்து தரிப்பிடத்திற்குள் செல்வதினால் பயணிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவித்தனர் .

மலசல கூடத்தின் கழிவு நீர் குறித்த பகுதியில் கசிந்து வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் பலநோய்களை எதிர்கொள்ள வேண்டியதால் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கன்றனர் .

இந்த துர்நாற்றம் குறித்து சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இதற்கான  எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லையெனவும் இம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

IMG_20180227_111827 IMG_20180227_111741

அம்பகமுவ பிரதேசசபையினால் புதிதாக நிர்மாணிக்கபட்ட பேருந்து தரிப்பிடத்தில் உள்ள மலசல கூடத்தின் கழிவு நீரினை தடுப்பதற்கு சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பிரதேசமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here