போராட்டங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்துகின்ற நீர் மற்றும் கண்ணீர்ப்புகைக்கு எந்தவிதமான தரமும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் தேசிய மக்கள் சக்தி நடத்திய போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட நீரில் மலம் கலந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த நீர்த்தாக்குதல்களுக்குப் பிறகு, உடல் முழுவதும் கீறல்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் பல போராட்டக்காரர்கள் சிக்கல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அவை காலாவதியானவை மற்றும் தரமற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்ய வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக முறைப்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.