மலைமகள் தாய்க்கு என் இதயம் கனிந்த அகவை தின வாழ்த்துக்கள்.

0
142
ஆண்டு அறுபத்தொன்றை அடைந்திருக்கும் மலைமகள் தாய்க்கு என் இதயம் கனிந்த அகவை தின வாழ்த்துக்கள். மலைமகள் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் என்ற வகையில் வாழ்த்து கூறுவதில் பெருமைப்படுகின்றேன்..
எழில் கொஞ்சும் மலையகத்தின் கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள என் கல்லூரித் தாய் இன்று 61வது அகவையில் தடம் பதிக்கிறது.
61 ஆண்டுகளுக்கு முன் எம் கல்லூரி வரலாற்றினை சற்று பின் நோக்கிப் பார்க்கும் போது சில மறக்கமுடியாத சம்பவங்களாக நாம் செவிகளினூடாக கேட்ட வரலாறுகள் நினைவு படுத்த தக்கவை. 1960களில் சமூக நலனில் அதிகம் நாட்டம் கொண்ட வர்த்தகரான திரு.பி.ஆர்.டி கருப்பையா பிள்ளை அவர்கள் தற்போது இக் கல்லூரி அமைந்துள்ள காணியை நன் கொடையாக வழங்கப்பட்டுள்ளார். இவரது அர்ப்பணிப்பு இப்பிரதேச வாழ் தமிழ் மக்களின் கல்வி கண் ஊற்றெடுப்பதற்கு துணை நின்றது என்பதை இன்றோடு ஒப்பிடுகையில் மறுக்கவியலாது. இச் சந்தர்ப்பத்தில் அவர் செய்த சேவையை நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களாக உள்ளோம் அத்தோடு திரு.நடேசன் அவர்களும் இக்காணியின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி கல்வி பணிக்கு தொண்டாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற காணியில் தெல்தோட்டை பிரதேசத்தில் வாழும் தமிழ் சமூகத்தினரின் அயராத முயற்சியினாலும் உழைப்பினாலும் ஓர் கட்டிடம் உருவாகிறது. இந்த கட்டிடம் 29.05.1961இல் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு தன்னுடைய பிறப்பினை ஆரம்பித்த இக் கல்லூரியின் முதலாவது அதிபராக 1961-1965 வரையான காலப்பகுதில் திரு.அராலியூர் சுந்தரலிங்கம் என்பவர் கடமையாற்றியுள்ளார் இக் காலப்பகுதியில் இப் பிரதேச கல்வி வளர்ச்சிக்காக அதிக அக்கரையுடன் இவர் செயற்பட்டுள்ளார்.
அன்று முதல் இன்று வரை கல்லூரி மீது அக்கறை கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் என இன்றுவரை பணியாற்றி வருகின்றனர். அன்று ஆரம்பித்த தன் பணியை மலைமகள் இன்றுவரை ஆற்றிவருவது மலைமகளின் தனிச்சிறப்பு. அந்த வகையில் பல்கலைக்கழகம், கல்வியற் கல்லூரி என தன் பிள்ளைகளை மலைமகள் இன்றுவரை களம் காண வைத்துள்ளது. கலாநிதி , விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மீது அக்கறை கொண்ட வர்த்தகர்கள், நலன்விரும்பிகள் பலரை உருவாக்கியுள்ளது.
மலைமகளில் கல்வி கற்று விலகி சென்ற பழைய மாணவர்களும் இது வரைக்காலமும் கல்லூரியோடு சங்கமித்த வண்ணமே இருக்கின்றனர். அத்தோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்,கல்லூரியின் வளர்ச்சிக்கும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கி கொண்டே வருகின்றனர்.
இருப்பினும் பழைய மாணவர் சங்க செயலாளர் என்ற வகையில் எனது பணிவன்பான வேண்டுகோள் மலைமகள் தாயின் பாதத்தில் வளர்ந்த சகல பழைய மாணவர்களையும் இடைவிடாத ஒரு தொடர்பினை பேணும் வகையில் எமது கல்லாரி அகவை தினத்திலே ஒரு அழைப்பினை விடுக்கின்றேன்.
எம் கல்லூரித் தாயே 61 வருடம் கடந்தும் தன் சமூகத்தில் அசையாத நிலையான ஒரு தனித்துவ பண்பு கொண்டு திகழ்ந்தாலும் மேலும் இந் நிலை தொடர எனது வாழ்த்துக்களை கூறுவதோடு, என் பணி என் கல்லூரி என்ற வகையில் தொடரும் என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அந்த வகையில் ஆண்டு 61 அடைந்திருக்கும் என் கல்லூரி தாய்க்கு இவ் அடியேனின் அன்பு கலந்த வாழ்த்தினை மீண்டும் கூறிக் கொள்கின்றேன். அத்தோடு சகல பழைய  மாணவர்களையும் கல்லூரியோடு இடைவிடா தொடர்பை பேண ஒரு அழைப்பை கல்லூரி தினத்திலே விடுக்கின்றேன்.
நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here