நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அபிவிருத்தி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது போது மலையகத்திற்கு மலையக அபிவிருத்தி அமைச்சை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்தலவாக்கலையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த தேர்த்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வீழ்ந்து விட்டதாக சிலர் கூறினர் ஆனால் இன்றைய மேதினக்கூட்டத்தில் வந்து குவித்திருக்கும் எமது மக்கள் கூட்டம் பறைசாற்றுகின்றது. தோல்வி அல்ல வெற்றி என்று இதை மாகாணசபை தேர்தலின் உந்து சக்தியாக ஏற்றுகொள்வோம் என்றார் மேலும் அமைச்சரவை மாற்றத்தின் போது மலையகத்தை பிரதி நிதித்துவபடுத்தும் தமிழ்முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சுளை வழங்க வேண்டும் என்பதோடு கண்டிக்கும் தெற்கிற்கும், கிழக்கிற்கும் அபிவிருத்தி வழங்கப்பட்டுள்ளதை போல மலையகத்திற்கு அபிவிருத்தி அமைச்சை வழங்க அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுக்கின்றேன்.
மேலும் இனி வரும் காலங்களில் யார் ஆட்சி அமைத்தாலும் மலையக மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையும் அத்தோடு மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் அமைக்க இரண்டு ஏக்கர் காணியை வழங்க கல்வி அமைச்சுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளவதுடன் தொழிலாளர்களின் சம்பள விவகாரங்களின் போது தோட்ட கம்பனிகள் அரசாங்கம் கிளைபோஸ்ட் மருந்து தடை செய்யப்பட்டுள்ளமையினால் சம்பள அதிகரிக்க முடியாது என தெரிவித்தது தற்போது நவின் திசாநயக்க அவர்களினால் கிளேபோஸ்ட் தடை நீக்கியதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு. இராமச்சந்திரன்