மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்

0
183

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (09.11.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டகலை நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன், பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் கொட்டகலை பிரதேச சபை வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்திக்கூறினர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here