மத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று (25) மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது.
அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.
அந்த நீர்த்தேக்கத்தால் நீர் பெறும் பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க வேண்டி ஏற்படும் என்று அதன் மின்சார உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எஸ் .சதீஸ்