மலையகப்பகுதியிலிருந்து நாட்டை விட்டு வெளியேறுவரின் தொகை அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கும் நாட்டின் அபிமானத்தி;னை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயப்பட வேண்டிய காலம் உருவாகியிருப்பதாக தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் திருமதி சசிபிரபா சுபாசினி பிரேமசிங்க தெரிவித்தார்
சமூக மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாட்டில் மொழி உரிமையை அடைந்து கொள்வதில் சமூக செயப்பாட்டுத்திட்டம் எனும் தொனிப்பொருளில ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு கொட்டகலை கொமர்சல் பகுதியில் இன்று 25 ம் திகதி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று எமது பிரதேச செயலகத்தில் வருபவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவே வருகை தருகின்றனர்.அவர்களின் எண்ணம் வெளிநாட்டில் சென்று நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழலாம் என்பது தான் ஆனால் எமது நாடு போன்று ஒரு நாடு உலகில் இல்லை என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர் என்பது தான் கவலை இன்றுள்ள பெருபாலான புத்தி ஜீவிகள் நினைக்கின்ற விடயம் தான் அடிமட்டத்தில் சேவையாற்றும் போது பல்வேறு நபர்களுடன் முட்டி மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் தனக்குள்ள அந்தஸ்த்து கிடைக்காமல் போவதாகவும் இதன் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர் எமது நாட்டில் உள்ள பாரிய பிரச்சினை தான் ஒழுக்கமின்னை இதனால் தான் இந்த நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது சிறு வயது முதல் நாம் எமது பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தினை கட்டுக்கொடுக்க வேண்டும் அதே போன்று எமது நாட்டில் இன்று ஆங்கில மொழியில் மொழி பிரான்ஸ் நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட கதைகள் கிடைக்கின்றன ஆனால் எமது நாட்டில் வாழும் சகோதர மொழியான தமிழர் கலை கலாசாரங்களை உள்ளடக்கி அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் அடங்கிய கதைகள் இந்த நாட்டில் கிடைப்பதில்லை இது பாரிய குறைபாடாகும் தமிழ் இலக்கியங்களிலும் வாழ்வியல் அம்சங்களிலும் எடுத்து கொள்ள வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன.
எனவே இவற்றை பிரதி பலிக்கும் கதை புத்தகங்கள் எதிர்காலத்திலாவுது வரவேண்டும் கலாசார சமய வேறுபாடுகள் காரணமாகவும் அவற்றின் அறியாத நிலை காரணமாகவுமே நாம் பல வருடங்கள் இந்த நாட்டில் யுத்தத்திற்கு முகம் கொடுத்தோம் அந்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயப்படுவது அவசியம் கடந்த காலங்களில் என்னிடம் கதைப்பது வருபவர்கள் முகவர் ஒருவர் ஊடகவே வருகை தருவார்கள் ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது இன்று மக்கள் நேரடியாக எம்மிடம் வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு செல்கிறார்கள் அதற்கு காரணம் மொழி வாண்மை பெற்றமையே ஒருவர் சிறந்த தொடர்பாடலை மேற்கொள்வது தங்களுடைய தாய் மொழியிலேயே அந்த அளவுக்கு அவர்கள் மொழி அறிவு பெரும் போது தங்களுடை தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவி;த்தார்.
மலைவாஞ்ஞன்