மலையகமக்கள் முன்னனியை விட்டு நான் விலகபோவதும் இல்லை, இ.தொ.கா.வோடு இணையபோவதும் இல்லை- வேலுசாமி இராகிருஸ்னன் அதிரடி அறிவிப்பு

0
163

மலைய மக்கள் முன்னனியை விட்டு நான் விலகபோவதும் இல்லை மலையக மக்கள் முன்னனியை விட்டு இலங்கை தொழிலாளர் காங்ரஸோடு இணையபோவதும் இல்லை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதகிருஸ்ணன் தெரிவித்தார் 26.08.2018.ஞாயிற்றுகிழமை அட்டன் கொமர்ஷல் அஸ்விக்கா விருந்தகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனனை தெரிவித்தார். இந்த ஊடகவியலாலர் சந்திப்பின் போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்அனுஷியா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னனியின் நிதிச்செயலாளர் விஜேந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னன் நான் மலையக மக்கள் முன்னனியில் இருந்து விலகி இலங்கை தொழிலாளர் காங்ரஸோடு இணையபோவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே ஆகையால் இதனை மக்களுக்கு தௌிவு படுத்தவே தான் இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

அண்மையில் அட்டனில் இடம் பெற்ற எனது 30வருட அரசியல் பயணத்தில் கால் பதித்த எனக்கு மலையக மக்கள் முன்னனியின் ஊடாக ஏற்பாடு செய்யபட்ட நிகழ்விற்கு இலங்கை தொழிலாளர் காங்ரசை சார்ந்தவர்கள் மற்றும் அல்ல அனைத்து கட்சியினை சார்ந்தவர்களும் வருகைதந்திருந்தார்கள் இந்த வதந்தியினை வெளியில் உள்ளவர்கள் எவரோ சோடித்து இருக்கிறார்கள் நான்தமிழ் முற்போக்கு கூட்டணியோடு தான் இணைந்து எனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன் ஆகவே இது அனைத்தும் பொய்யான வதந்தி எனவும்  குறிப்பிட்டார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here