‘மலையகம் 200’ எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் – ஹட்டனிலும் விசேட நடைபவணி

0
226

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையிலும் மலையக மக்களுக்கு சொந்தகாணி உரிமை வழங்கப்படவில்லை.
மலையகம் – 200 வருட நிறைவை முன்னிட்டு ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பு மத தலைவர்களின் அனுஸ்டாங்களோடு நடைபவணி ஆரம்பிக்கப்பட்டது.’மலையகம் 200 நாம் இலங்கையர்கள்’ எனும் தொனிபொருளுக்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் இந்த நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக கொட்டகலை பத்தனை ஊடாக தலவாக்கலை பேருந்து நிலையத்திற்கு சென்றடைய உள்ளதோடு நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி நானுஒயா லிந்துளை வழியாக தலவாக்கலை பேருந்து நிலையத்தினை வந்தடைந்து.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையிலும் மலையக மக்களுக்கு சொந்தகாணி உரிமை வழங்கப்படவில்லை.

எனவே, இந்த 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மலையக மக்களுக்கான சொந்த காணி வழங்கப்படவில்லை என மலையக மக்களுக்கு சொந்த காணி, கல்வி, சுகாதாரம், விளையாட்டு போன்ற சகலதுறைகளிலும் மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கையென நடை பவணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் என பெருந்திரளான மலையக பெருந்தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த நடைபவணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பில் அருட்திரு. செங்கன் தேவதாசன் தெரிவிக்கையில்,

‘மலையகம் 200’ எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.அதனைத் தொடர்ந்து, தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் மாத்தளையை வந்தடைந்த பின்னர் பகல் 12.30 மணிக்கு இறுதிநாள் நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.

மலையக மக்களின் வருகையின் 200ஆவது வருடப் பூர்த்தியை நினைவுகூரும் நடைபவனியில் மலையகத் தமிழ் சமுதாயத்தினர் முழுமையான மற்றும் சமமான பிரஜைகளாக, அர்த்தபூர்வமாக பங்கேற்றுள்ள நிலையில் தம் சமூகம் சார்ந்து 11 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் இப்பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக அமைவதோடு, அவர்களின் முறையீட்டுக்கு ஆதரவளிப்பவர்கள் பங்கேற்கும் ஆதரவுப் பயணமாகவும் அமைந்திருந்தது.

மலையக எழுச்சிப் பயணத்தின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பொழுதுகளிலும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, உதவிகள் நல்கி பங்களிப்புச் செய்து அனைத்து வழிகளிலும் தோளோடு தோள் நின்ற அரசியல் தரப்பினர், சமூக மட்ட அமைப்புகள், சிவில் சமூகத்தினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here