இந்துக்களின் விரதங்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரிவிரதம் இன்று (26) திகதி மலையக இந்து ஆலயங்களில் மிக சிறப்பான இடம்பெற்றது.
ஹட்டன் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று 26 ம் திகதி ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முகப்பெருமானுக்கும் அம்பாலுக்கும் சிவபெருமானுக்கு விசேட அலங்கார பூஜைகள் இடம்பெற்றதுடன் தேவாரா திருபாராயணங்கள் பிராரத்தனைகள் இடம்பெற்று திருவிளக்கு பூஜை கௌரிகாபு;பு கட்டு நிகழ்வு ஆகியனவும் நடைபெற்றன.
கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதத்தினை பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிக்கினறமை குறிப்பிடத்தக்கது.
இந்த கௌரி விரத பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாளை இவ்வாலயத்தில் கந்த சஷட்டி விரதம் ஆரம்பமாகவுள்ளதாக கோயில் அரங்காவலர் சபையினர் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்




