இ.தொ.கா.வின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலபகுதியில் இருந்தே மலையக கல்வி துறைக்கு தேவையான வளங்களை பெற்றுகொடுத்து இருக்கிறார். ஆறுமுகன் தொண்டமான் பெருமிதம்மலையக கல்விதுறை வரலாற்றில் மலையக பாடசாலைகளுக்கான அதிகமான வளங்களை இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூரத்தி தொண்டமான் அவர்கள் பெற்று கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். 29.06.2018.வெள்ளிகிழமை ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவு அமைந்துள்ள பிரதான மண்டபத்தில் வைத்து ஹட்டன் வலயகல்வி பணிமனைக்கு உற்பட்ட 64 பாடசாலைகளுக்கான 60 இலட்ச்சம் ரூபா செலவில் கணணி மற்றும் தளபாடங்கள் போன்ற உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்தார்
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிலிப்குமார் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதிரவி குழந்தைவேல் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மேலும் உறையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உங்கள் அனைவருக்கும் தெரியும் இ.தொ.கா.வின் ஸ்தாபகதலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலபகுதியில் மலையக பாடசாலைகள் எவ்வாறு இருந்ததோ அதனை பாதுகாப்பாக கட்டி காத்து இன்று நல்ல நிலமைக்கு முன் கொண்டு வந்துள்ள பெறுமை பாடசாலைகளில் பணிபுரிந்து வருகின்ற அதிபர்கள் ஆசிரியர்கள் காரணம் பாடசாலைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுத்து செல்ல எங்களால் வளங்களை மாத்திரம் வழங்கமுடியும் அந்த வளத்தினை பயன்படுத்தி மேலும் கல்வி துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவேண்டிய முக்கிய கட்டுப்பாடு அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது எனதெரிவித்தார்.
இன்று மலையகத்தில் உள்ளபாடசாலைகளை எடுத்து நோக்குகின்ற போது கொழும்பு பகுதிகளில் உள்ள பாடசாலைகளை விட எமது சமூகத்தில் உள்ள பாடசாலைகள் முன்னிலை பெற்று காணபடுகிறது எமது அதிபர்களும் ஆசிரியர்களும் நிகராகவே காணபடுகிறார்கள் எமது பாடசாலைகளில் வளப்பாற்றாகுறை குறைவாக காணபடுவதால் தான் எமது மாணவர்களும் பின்னடைந்து காணபடுகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அச்சி ஊடகம் ஒன்றில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லலூரியின் காணி தொடர்பான ஒரு கட்டுரையை பார்த்தேன். அந்த கட்டுரையிலே ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வழங்கபட்ட காணி வேறு அந்த அச்சி ஊடகத்திலே எழுதபட்டிருந்த காணி வேறு
நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தோம் கொள்கை ரீதியாகத்தான் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு காணிகளை வழங்கியிருந்தோம். இன்று பாடசாலைகளில் பிரதானமாக காணப்படுகின்ற ஒரு பிரச்சினை காணிபிரச்சினை சௌமிய மூரத்தி தொண்டமான் காலபகுதியில் இருந்து ஒரு கொள்கை இருந்து வருகிறது பாடசாலைகளுக்கு கட்டாயம் இரண்டு ஏக்கர் காணி வழங்கபட வேண்டும் என்ற நிபந்தனை இருந்து வருகிறது. ஆனால் இன்று ஹைலன்ஸ் கல்லூரிக்கு மாத்திரம் 10 ஏக்கர் காணி பெற்று கொடுத்துள்ளோம். நாவலபிட்டி பகுதியில் ஒரு பாடசாலைக்கு 05 ஏக்கர் காணி பெற்று கொடுத்துள்ளோம் எனவே பாடசாலைகளுக்கு காணிகளை பெற்றுகொடுக்கும் போது அதனை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும்.
யார் யார் எந்தந்த பகுதியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ அல்லது சம்பந்தபட்ட தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக இது போன்ற காணி பிரச்சினைகளுக்கு தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும் என தெரிவித்தார்.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன், கேதீஸ்