மலையகத்தின் நீண்ட காலமாக பேசும் பொருளாக இருந்து வந்த மலையகம் பல்கலைக்கழகம் கொட்டகலை கொமர்சல் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன ஆனால் அந்த பல்கலைக்கழகம் அந்த இடத்தில் தற்போது அமைவதற்கான எந்த சாத்தியகூறுமில்லை.காரணம் அது தற்போது சலுகைகளுக்காக கைநழுவிப்போய் உள்ளது அந்த காணி தற்போது கொமர்சல் பகுதியில் அமைந்துள்ள இரானுவ முகாம்க்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மலையக மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்த மேதின நிகழ்வு மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டத்தில் நேற்று 02 ம் திகதி நடைபெற்றது.
இதில் தோட்டப்புறங்களிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி மருத்துவம்,பொறியியல்,சுற்றுலாதுறை,வர்த்தகம்,கலை,என பல்வேறு துறைகளில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரை அனுப்பி வைத்தமைக்காக அவர்களை பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்கள் கல்வியினை தொடர நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகம் மாற்றம் பெற வேண்டுமானால் அது கல்வியில் தான் உள்ளது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர் ஆனால் அந்த கல்வி வளர்ச்சிக்கு மலையக கட்சிகள் எந்த அளவுக்கு உதவி புரிகின்றனர் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை பெரும்பான்மை பகுதியில் காணப்படுகின்ற பாடசாலைகளில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன ஆனால் எமது பிரதேச பாடசாலைகளில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுகின்றதா?மலையக தொழிற்சங்கங்கள் இன்று தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து சந்தா பணம் பெறப்படுகின்றன அவர்கள் நினைத்திருந்தால் பல தொழிலாளர்களின் பிள்ளைகளை பட்டதாரியாக்கியிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யப்போவதில்லை ஏனென்றால் அதை வைத்துதான் அரசியல் செய்யலாம் நான் அப்படியல்ல என்னால் முடிந்தளவு கல்விக்காக செலவிடுவேன் எனக்கு ஒரு தோட்டத்தில் 10 அங்கத்தவர் இருந்தால் அந்த 10 பேரினது காசை கல்விக்காக செலவிடுவேன்,
இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் இது உண்மையில் கிடைக்குமா என்பது பொருத்திருந்தே பார்க்க வேண்டும் காரணம் கம்பனிகளுடன் பல்வேறு டீல் இடம்பெற்றிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்திருந்தார்.அவர் 200 மலையகத்திற்கும் பொங்கல் விழாவுக்கும் கம்பனிகள் பணம் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.அப்படியானால் இது கிடைக்குமா என்பது பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதே நேரம் தொழிலாளர்கள் என்பவர்கள் மலையகத்தில் மாத்திரம் கிடையாது துறைமுகங்களில் இருக்கின்றனர்,நகர பிரதேச சபைகளில் பணிபுரிகின்றனர் அவர்களுக்கு எல்லாம் வாழ்க்கை செலவுக்கேற்ப கொடுப்பணவுகள் பெற்றுக்கொடுக்கும் போது ஏன் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொடுக்க முடியாது இது மலையக மக்கள் பிரதிநிதிகளின் கையாலாகாத தனம் என்று தான் கூற வேண்டும்.
இன்று ஒரு சிலர் காணி உரிமையை பற்றி பேசுகின்றனர் ஆனால் அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு காணிகளை பெற்றுக்கொடுத்துள்ளது அப்படி காணி உரிமையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் முதலில் குத்தகை கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தினை மீளப்பெற வேண்டும் அதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை கொண்டு வரப்பட வேண்டும் அவ்வாறு இல்லாது காணி உரிமையினை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது அதே நேரம் இன்று எவ்வளவோ தோட்ட காணிகள் சும்மாகிடக்கின்றன அவற்றினை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டத்தினை கொண்டு வரவேண்டும் அது ஒன்றும் செய்யாது அரசியல் லாபத்திற்காக சம்பளத்தினை கூட்டி விட்டோம் காணி உரிமை பெற்றுக்கொடுத்து விட்டோம் என்றெல்லாம் தெரிவித்து மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இதன் உண்மைத்தன்மையினை நன்கு ஆராய்ந்தால் தான் புரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேதின கொண்டாட்டங்களின் போது பெரும் பாலும் தொழிலாளர்கள் வெயில் மழை தாகம்,பசி உள்ளிட்ட விடயங்களை பொருட்படுத்தாது கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஒரு நிலையில் தொழிலாளர்களை கொண்டு வந்து மிகவும் கௌரவமாக உட்காரவைத்து அவர்களை கௌரவித்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கிய நிகழ்வானது பாராட்டத்தக்கது என இங்கு உரையாற்றிய பலர் தெரிவித்தனர்.
மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இதில் அவ்வமைப்பின் செயலாளர் தினேஸ்குமார் மகளிர் பிரிவு பொருப்பாளர் பிரியா,உட்பட சுமார்; கல்வி மான்கள்,ஓய்வு நிலை அதிகாரிகள்,சமூக சேவையாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்