மலையக மக்கள் முன்னணி கடந்த காலமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரின் தனௌனிச்சையான செயற்பாடுகளினாலும் அடாவடியில் ஈடுபடுவதினாலும் பலர் கட்சியிவிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் கடந்தவாரம் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினராக காணப்பட்டவரும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைவரின் புதல்வருமான குறித்த நபர் தான் மாகாணசபை காலத்தில் பிரத்தியேக செயலாளாராக காணப்பட்டவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்நிலையால் கட்சியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
தன் தந்தையின் பெயரை சொல்லி இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டு வருவதால் கட்சியிலிருந்து இடைவிலக சிலர் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.