மலையகத்தில் காணப்படும் தொழிற் சங்சங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் மலையக தொழிலாளர் முன்னணி பிரதேசங்கள் தோரும் தனது மாவட்ட தலைவர்களை உருவாக்கி தொழிற் சங்கத்தை பலப்படுத்தி வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக 16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களை முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களால் வழங்கி வைக்கபட்டது. இதன் போது முன்னணியின் உயர்மட்ட அதிகாரிகள்¸ அங்கத்தினர். உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
பா.திருஞானம்