மவுசாக்கலையில் ஜீப்” வண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; பிக்கு உட்பட மூவர் படுகாயம்!

0
140

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் 25.02.2018 அன்று காலை 11.35 மணியளவில் ஜீப் ரக வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மதகுரு உட்பட மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

DSC02767DSC02750

மஹியாங்கனை ஹசலக பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்று மீண்டும் மஹியாங்கனை ஹசலக பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here