மஸ்கெலியா பிரதேச மக்களின் தாய் பாடசாலையான சென் ஜோசப் கல்லூரி ஆரம்பத்தில் தேசிய கல்லூரியாக தரம் உயர்தபட்டு பட்டியலில் பெயர் குறிப்பிட்டிருப்பது. தற்போது இந்த பாடசாலையின் பெயர் நீக்க பட்டது பெரும் வருத்தத்தை தருகின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பிரதேசத்திற்கே தாய் பாடசாலையாக விளங்கும் இந்த பாடசாலை ஒரு வளர்ந்து வரும் பாடசாலையாகவும் சிறந்த கல்விமான்களையும் உருவாக்கிய பாடசாலையாகும்.
தேசிய கல்லூரிக்கான தகுந்த தகுதியும் உள்ள இந்த பாடசாலையை பட்டியலில் இருந்து நீக்கியதற்கு மலையக ஆளும் கட்சி அரசியல் செயற்பாட்டாளர்களே காரணம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எமது சமூகம் நலன் கருதி முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரதின் ஆலோசனைப்படி மலையகத்தின் 7 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த ஏற்பாடு செய்ய பட்டது.
அதையும் மலையகத்தில் உள்ள அருவருடி அரசியல் வாதிகளின் கைக் கூலிகளாளே நிராகரிக்க பட்டதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே அதே போல் இந்த பாடசாலைக்கும் அதே அரசியல் வாதிகளே காரணம் மஸ்கெலியா பிரதேச மக்கள் இந்த அரசியல் வாதிகளை மிக விரைவில் இனங்கண்டு கொள்வர்.
இந்த மஸ்கெலியா சென் ஜோசப் பாடசாலைக்கு அநீதி இழைக்கும் பட்சத்தில் நாமும் பழைய மாணவர்களோடு சேர்ந்து வெற்றிக்காக போராடா தயாராக இருக்கின்றோம் வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் எனவும் கூறியுள்ளார்.