மஸ்கெலியா பிரதேச சபை தலைவரை தேர்வு செய்யும் அமர்வில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது.
மஸ்கெலியா பிரதேச்சபை இ.தொ.கா.வசம் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மஸ்கெலியா பிரதேச்சபையை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தன் வசம் பெற்றுள்ளது.
28.03.2018. புதன் கிழமை இடம் பெற்ற பதவி நியமனம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான செம்பகவள்ளி என்பருக்கு மஸ்மஸ்கெலியா பிரதேச்சபையின் தலைவர் பதவி வழங்கபட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்ரசின் உறுப்பினர்களுக்கும் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இன்று இடம் பெற்ற வாக்களிப்பில் இ.தொ.கா.சார்பாக எட்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு ஜக்கிய தேசிய கட்சியில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லையெனவும் இவரை தடுத்த நிறுத்தியது இ. தெ.கா.வின் செய்யபட்ட சூழ்ச்சியெனவும் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேலை மஸ்கெலியா நகரபகுதியில் இ.தொ.கா.ஆதரவாளர்களும் ஜக்கிய தேசியகட்சியின் ஆதரவாளர்களும் பேரணியில் ஈடுபட ஆயத்தமானபோதும் பேரணிக்கான அனுமதியை வழங்குமறுத்து தடுத்தமையினால் மஸ்கெலியா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்