மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை மீறுவதற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

0
202

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுடன் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் நடத்தினார்.அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை சந்தித்ததுடன் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட
அவர் தொழிலாளர்கள் மீதான நவீன அடிமைத்தனத்துக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்பட்டு, நிர்வாகத்தின் அணுகுமுறை மாறும் வரை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here