ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாரிய மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆஜராகியுள்ளார்.
நாவலபிட்டி ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமாக இடமொன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டம் ஒன்று குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.