முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடக பேச்சாளர் சட்டதரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03)குறித்த வாகனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு வாகனமானது துப்பாக்கி சூடு மற்றும் ஏனைய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தில் இருந்து கடந்த மாதம் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




