மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் தடைப்பட்டமையால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.காலியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறித்த சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான நீண்ட தூர பேருந்துகளை முன்னெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.