மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாச கொப்பிகள்

0
238

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்தார்.

லங்கா சதொச கடைகளில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட உயர்தர பயிற்சிப் புத்தகங்கள் நாடு பூராகவும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக காரியவசம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here