மாநகர சபை, நகர சபை,மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள்,உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்களுகான விசேட கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் கொட்டகலை Clf வலாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டதில் இ.தொ.கா வின் எதிர்கால அரசியல் நகர்வுகள் ,மற்றும் நகர ,பிரதேச சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் மத்திய மாகாண விசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட இ.தொ.கா வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.



