“தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருடத்துக்கான மகளிர் தின விழா மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம் பெற உள்ளது” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கான விசேடக் கூட்டம் ஒன்று அட்டன் அஜந்தா விருந்தக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தொடர்ந்து பேசிய போது கூறியதாவது:
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தினை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தினம் மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயா பிரதேசத்தில் அமைந்துள்ள தாயகம் மண்டபத்தில் இடம் பெற உள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர்
எஸ். பிலிப் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர்களான ஏ.ராஜமாணிக்கம்,கே. கல்யாணகுமார், திருமதி வைலட் மேரி ஆகியோர் உரையாற்றினார்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களும்அமைப்பாளர்களும் இணைப்பாளர்களும் முழு நேர உத்தியோகஸ்தர்களும் உள்ளூராட்சி மன்றங்களில் முன்னாள் உறுப்பினர்களும் வேட்பாளர்களும் மகளிர் பிரிவு இணைப்பாளர்களும்
தோட்டக்கமிட்டி தலைவர்களும் தலைவிமார்களும் பணிமனை உத்தியோகஸ்தர்களும் இளைஞர் அணி இணைப்பாளர்களும் ஏனைய செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.




