மாலி தாக்குதலில் பொதுமக்கள் உற்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

0
202

மாலி அரசாங்கத்தினால் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில் சுமார் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலியில் வடகிழக்கு பகுதியில் நேற்றைய தினம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.மாலி இடைக்கால அரசாங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

பயணிகள் படகு மற்றும் இராணுவ முகாம் ஆகியவற்றின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, நைஜர் ஆற்றில் பயணித்த பயணிகள் படகு மீது மூன்று ரொக்கெட்டுகள் மூலம் இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த குழுவினர் மாலி இராணுவ முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 50 இஸ்லாமிய போராளிகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாலி அரசாங்கத்தினால் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here