மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள்பரிசீலனையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீள்பரிசீலனைக்கு பின்னர் மீண்டும் மின் கட்டணம் குறைக்கப்ப டும் சாத்தியம் உள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




