மின்தடை பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம் ..!

0
183

நாட்டில் நாளாந்தம் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திறைசேரி குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here