மின் கட்டண குறைப்பு தொடர்பில் CEBக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0
151

இலங்கை மின்சார சபையினால் இதுவரையான மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான பிரேரணைகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக இம்மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய 10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அறிவுறுத்தியுள்ளது.

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின்கட்டண குறைப்பு வீதத்தை ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் எனவும் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here